ஞாயிறு, 7 மே, 2017

2. நதிமூலம்-2

Image result for gambling den
கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.

சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.

இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...

12 கருத்துகள்:

  1. அடுத்து என்ன? ஆர்வமாக இருக்கிறேன். - அது இருக்கட்டும். வலைத்தளம் அமைப்பையே முற்றிலும் மாற்றி விட்டீர்கள் போல் இருக்கிறது. வேறு விவரம் எதுவுமே இல்லை. வலைத்தளத்தின் தலைப்பை வைத்துதான் கண்டு கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்லாத்தான் இருக்குது. பதிவர் யாருன்னு தெரியாம இருக்கிறது நல்லது இல்லையா?

      நீக்கு
  2. அனுபவங்கள் அருமை ...... அவற்றைச் சொல்லிச்சென்ற விதம் அதைவிட அருமை.
    இவ்வாறு குட்டிக்குட்டிப் பகுதிகளாகத் தொடரட்டும் இந்த நதி மூலம்.

    பதிலளிநீக்கு
  3. ரெண்டு பத்தியோட, 'தொடரும்' போட்டுட்டீங்க.. நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு.

    உங்ககிட்ட கேட்கணும். டக்கென்று ரிடையர் (ஓய்வு ) ஆனபின், எப்படி உங்கள் தின வழக்கத்தைக் கட்டமைத்துக்கொண்டீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு ரொம்ப பயிற்சி எடுக்கணும். ரிடையர் ஆவதற்கு ஐந்து வருடங்கள் முனபிருந்தே வேலைகளை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்குங்க. ஆபீஸ்ல முடிஞ்ச மட்டும் லீவு போடுங்க. பொறுப்பான பதவிகளில் இருக்காதீங்க. அப்புறம் ருடையர் ஆவதற்கு முன்பே ஏதாவது ஒரு பார்ட்-
      டைம் வேலையைப் பிடிச்சுக்குங்க.

      நாளாக நாளாக சரியாப்போயிரும்.

      நீக்கு
  4. ஐயா

    நீங்கதான் பாயிண்டுக்கு அரை பைசா வைத்து விளையாடிவராயிற்றே. எதுக்கு பயப்படணும். காசு இல்லாமல் விளையாடுவதாலா?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க, ஐயா. உங்க மாதிரி சிநேகிதங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.

      நீக்கு
  5. என்னவானார் உங்க நண்பர்?! ஆவலுடன்

    பதிலளிநீக்கு
  6. ஆஹா... நல்லாத்தான் போகுது.. இந்த முறை ரொம்பவே சீக்கிரமா முடிச்சிட்டீங்களே... நண்பருக்கு என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு